இரவு நேர விருந்துகள் ஈசிஆர் பண்ணையில்.. யாரந்த நடிகர், நடிகை? திரைத்துறை பார்ட்டிகள்: பிரபலம் பளிச்

சென்னை: திரையுலகில் நடைபெறும் இரவு நேர விருந்துகள் குறித்து, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.. அந்த விருந்துகள் எங்கே எப்படி நடைபெறும் என்பது குறித்தும், அதை மீடியாக்கள் பதிவிடுவதை பற்றியும் தெளிவாக கூறியிருக்கிறார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி தந்துள்ளார்.. அதில், "நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நள்ளிரவு விருந்துகளை நடத்துவது வழக்கம்.. இந்த விருந்துகள் நட்சத்திர ஓட்டல்கள், அல்லது பனையூரை தாண்டிய பண்ணை வீடுகள், விருந்தினர் மாளிகைகளில் நடைபெறும்.
கலாச்சாரம்: இந்த கலாச்சாரம் எதற்காகவென்றால், நடிகர்களை பற்றி நடிகைகள் தெரிந்து கொள்ளவும், நடிகைகளை பற்றி நடிகர்கள் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.. பெரும்பாலும், சினிமா துறையினரை பொறுத்தவரை, திருமணம், பிறந்தநாள், படத்தின் வெற்றி இவைகளையொட்டியே இரவு விருந்துகளை நடத்துவது வழக்கம்.
பல விருந்துகளில் ஆட்டம், பாட்டம் களை கட்டும்.. பல விருந்துகளில் மது பரிமாற்றமும் உண்டு.. இப்படி மதுவிருந்து நடக்கும் நேரத்தில், தங்கள் டிரைவர்கள் அங்கு எதற்காக இருக்க வேண்டும் என்று நினைத்து, சில நடிகர்களும், இயக்குனர்களும், நடிகைகளும், தங்கள் டிரைவர்களை அனுப்பிவிடுவார்கள். பிறகு விடிய விடிய மதுவிருந்து நடந்து முடிந்து, இவர்கள் காரை ஓட்டிசெல்லும்போது, மிதமிஞ்சிய போதை காரணமாக விபத்துக்களில் சிக்கிவிடுகிறார்கள். இது பலரால் விமர்சிக்கப்படுகிறது.
கமல்ஹாசன்: இதேபோல் கமல்ஹாசன் வைத்திருந்த விருந்தில், கோகைன், மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் பரிமாறப்பட்டதாக, சுசித்ரா பேசியிருந்தார். அது உண்மையா? பொய்யா ? என்று தெரியவில்லை.. ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டு, அதில் கலந்து கொண்டால், விருந்தினை பாராட்டி சொல்ல வேண்டுமே தவிர, அங்கே என்னென்ன செய்தார்கள் என்பதை வெளியே சொல்வது நாகரீகமில்லை.
அதேசமயம், விருந்துகளில் போதையில் மயங்கிய நடிகர்கள், அல்லது நடிகைகள் சில தவறுகளை செய்வது இயல்புதான்.. அதை அவர்கள் உணர்ந்து செய்வதில்லை.. அப்படி உணரவும் அங்கு வாய்ப்பிருப்பதில்லை.. மேலும் இதுபோன்ற போதை விருந்துகளில் நடிகர்கள், நடிகைகளின் காதல் உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் விருந்துகளில், ஒருசில நடிகர், நடிகைகள் கட்டியணைத்து கொள்கிறார்கள், முத்தமிட்டு கொள்கிறார்கள்.
வயித்தெரிச்சல்: ஆனால், விருந்தில் பங்கேற்ற ஒருசிலர் இதை வெளியே மீடியாக்களில் பரிமாறி கொள்கிறார்கள். காரணம், சம்பந்தப்பட்டவர்கள் மீது வெறுப்பு, பொறாமை, வன்மை, வயித்தெரிச்சல் போன்ற காரணங்களால், தங்களுக்கு பிடிக்காதவர்களை பற்றி மீடியாவில் சொல்கிறார்கள். மீடியாக்காரர்களும், இதுதான் சாக்கு என்று, அவர்கள் சொல்லும் வதந்தி, தகவல்களை பதிவிடுகிறார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
அந்த காலத்தில் நடிகர்கள் எஸ்.எஸ். சந்திரன், விஜயகுமார் இவர்கள் இருவரும்தான் நடிகைகளை கட்டி அணைப்பார்கள்.. எஸ்எஸ் சந்திரனை மாமா என்றும், விஜயகுமாரை சார் என்றும் நடிகைகள் அழைப்பார்கள்.. இவர்கள் இருவருமே வயதில் மூத்தவர்கள்.. அதனால், அப்பா, சித்தப்பா, மாமா முறையில் நடிகைகள் இவர்களிடம் அன்பாக பேசுவார்கள். அதேபோல, இவர்களும், தங்கள் மகளாக, பேத்தியாக, சகோதரியாக நடிகைகளிடம் நடந்து கொள்வார்கள்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description