dark_mode
Image
  • Thursday, 06 March 2025

"ஆதிக் ரவிச்சந்திரன் படங்களில் ‘ரம்யா’ பெயர்: முன்னாள் காதலியின் பெயரா? – நெட்டிசன்களின் கேள்வி"

ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் காதலி யார் தெரியுமா?... தமன்னா முதல் த்ரிஷா வரை தொடரும் பெயர்!

சென்னை: த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது படங்களில் Female கதாப்பாத்திரங்களுக்கு ரம்யா என பெயர் வைத்து வருவதை சென்டிமென்டாக பாலோ செய்து வருகிறாரோ என்று நெட்டிசன்கள் கதைக்க தொடங்கியுள்ளனர். ரம்யா பெயரில் அப்படி என்ன ரகசியம் ஒழிந்திருக்கிறது என தெரியவில்லை என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

அஜித்தின் தீவிர ரசிகர்: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. சமீபத்தில் GBU படம் குறித்து பேசிய ஜி.வி.பிரகாஷ், அஜித்தை வைத்து இயக்கிய போது ஆதிக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அவரது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாகவும் தெரிவித்தார். அஜித் படம் என்றால் வெறிபிடித்த ரசிகராக ஆதிக் இருந்துள்ளார். அஜித் நடிக்கும் படங்களில் கெட்டப்புகளோடு தான் படத்திற்கு செல்வார் என்றும் ஜி.வி. தெரிவித்தார்.

 

சிம்பு படம் தோல்வி: த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை ஆதிக் இயக்கியிருந்தார். அப்படம் தோல்வி படமாக அமைந்தது. அதன்பின்னர் பிரபுதேவாவை வைத்து பகீரா படத்தை இயக்கியிருந்தார் அப்படமும் தோல்வியை சந்தித்தது. பின்னர், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டைம் டிராவல் மிஷனில் அடல்ட் கேங்ஸ்டர் காமெடி படமாக வெளியாகி 100 கோடி வசூலை குவித்தது. குட் பேட் அக்லி கிளிம்ப்ஸ்: அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அதில், ரம்யா என்ற கதாப்பாத்திரத்தில் திரிஷா நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரனும் ரம்யா பெயரும்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படங்களில் குறிப்பாக பெண்களின் கதாப்பாத்திரத்திற்கு ரம்யா என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரம்யா அவரது முன்னாள் காதலி பெயராக இருக்கலாம் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். AAA படத்தில் தமன்னா ரம்யா கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோன்று, பகீரா படத்திலும், நடிகையின் பெயர் ரம்யா என்றே இருக்கும். சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் ரிது வர்மா ரம்யா என்ற கதாப்பாத்திரலேயே நடித்திருப்பார். தற்போது வெளியான GBU படத்தின் கிள்ம்ப்ஸ் வீடியோவில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் ரம்யா என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் காதலி பெயரா?: ஒரு படம் குறித்த அறிவிப்பு வெளியானால் இதுதான் கதை என நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருவார்கள். அந்த வகையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படங்களை ஆராய்ந்து ரம்யா என்ற பெயரை கண்டுபிடித்து பாட்ஷா படத்தில் வரும் வசனத்தை போன்று சொல்லுங்க ஆதிக் ரம்யா யாரு உங்க முன்னாள் காதலியா என வலைதளத்தில் பலவிதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர். ரம்யா பெயரில் அப்படி என்னதான் இருக்கிறது, அப்பெயருக்கான அர்த்தங்களை நெட்டிசன்கள் தேட தொடங்கியுள்ளனர். BY.PTS NEWS M.KARTHIK

comment / reply_from

related_post