அரியலூரில் பாஜக, திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய் – “ஏமாற்றும் அரசுகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டம்” என உரை

திருச்சியை தொடர்ந்து அரியலூர் சென்ற தவெக தலைவர் விஜய் கட்சி தொண்டர்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது விஜய், பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களை சந்திக்கும் தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டு வருகிறது. இன்று திருச்சி மரக்கடை பகுதியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை செய்தார். இதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பகுதிக்கு சுமார் 5 மணி நேரம் கால தாமதாக வந்து சேர்ந்தார். எனினும் விஜயின் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரை பார்த்த பின்னர் தான் சென்றனா்.
இதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அங்கு குவிந்தனர். வெயிலின் தாக்கத்தால் 10க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தன. சுமார் 20 நிமிடங்கள் பேசிய விஜய், திருச்சியில் இருந்து அரியலூருக்கு கேரவனில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் அரியலூரில் என்ன பேசப்போகிறார் என்று முன்கூட்டியே கணித்து ராம்கி கூறி உள்ளார். இதுதொடர்பாக ராம்கி அளித்த பேட்டியில்," தவெக கட்சி தலைவர் விஜய் திருச்சியில் அருமையாக பேசினார்.
திருச்சி விஜய் பிரச்சாரம்
திருச்சியின் சிறப்புகளான மலைக்கோட்டை, பெல் நிறுவனம் போன்றவை குறித்து பேசினார். ஜெயலலிதா பாணியில் விஜய் பேசினார். அரியலூரில் எந்த பிரச்சினையும் பற்றி பேச முடியாது. ஏற்கனவே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது உள்ளிட்டவையால் குறைந்த நேரத்தில் அரியலூர் பற்றி அதிகம் பேசமாட்டார். பொதுவான விஷயங்களை மட்டும் மக்களுடன் பேசுவார். திருச்சியில் விஜய் பேசியது முதல் ஸ்டெப், மக்கள் பிரச்சினை குறித்து திருச்சியில் கேட்டுவிட்டார். எடப்பாடி பழனிசாமியை மிஞ்சி எப்படி பிரச்சாரம் செய்வார் என்பது கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் தான் தவெக தலைவர் விஜய் அரியலூரில் சுமார் 8.40 மணி அளவில் தனது பரப்புரையை தொடங்கியனார். அப்போது தொண்டர்கள் படைக்கு நடுவே விஜய் பேசுகையில், திருச்சியில் இன்று பிற்பகலில் பேசுகையில் மைக் பிரச்சினை ஏற்பட்டது. சாதாரண விஜயாக இருந்த என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது நீங்கள் தான். விஜய் அண்ணா, விஜய் தம்பி, விஜி என அன்போடு அழைக்கின்றனா். நம்மிடையே உள்ள உறவை கண்டு எதிரிகள் அஞ்சுகின்றனா். யார் என்ன சொன்னாலும் அறிஞர் அண்ணா கூறிய பஞ்ச் தான்.
2029ல் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்
வாழ்க வசவாளர்கள் என கூறி செல்ல வேண்டியது தான். நம்மை மேலும், கீழும் ஆட்சி செய்யும் பாசிச பாஜகவையும், திமுகவையும் கேள்வி கேட்க தான் வந்து இருக்கிறேன். இந்த பாஜக, பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் மாயமாகி உள்ளது. எவ்வளவு சிறப்பாக வாக்கு திருட்டு நடத்தி இருக்கிறாங்க. 2029ல் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும். அவர்கள் மாநில உரிமைகளை பறித்துவிட்டு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ளது பாஜக.
அப்போது தானே, வாக்கை திருடி தில்லுமுல்லு செய்வதற்கு தான். பாஜக தான் ஏமாற்றுகிறது என்று பார்த்தால், நம்மை ஆட்சி செய்யும் திமுகவும் ஏமாற்றுகிறது. நான், நீங்கள் என எல்லாரும் சேர்ந்து தான் அவர்களை ஆட்சி செய்ய வைத்தோம். ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி உள்ளனா். மை டியர் சிஎம் சார்... சமையல் கியாஸ்க்கு மானியம், மகளிர் உரிமை தொகை, டீசல் விலை, கல்வி கடன் தள்ளுபடி, 10 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை தருவேன் என கூறியது எல்லாம் செய்தீர்களா? என விஜய் கேள்வி எழுப்பினார்.
மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்போம் என்றீர்கள், அவர்களுக்கு வீடு கட்டுவது, மீன் பதப்படுத்தும் மையம் அமைப்போம் என கூறியது எல்லாவற்றையும் செய்தீர்களா? என்றார்.
மேலும் பேசுகையில் 2026 தேர்தலை ஜனநாயகப் போருக்கு ஒப்பிட்டு, மக்களிடம் நேரடியாக சந்தித்து உரையாற்றியதாகக் கூறினார்.அவர் உரையில், “ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது; திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது. இரண்டுமே ஏமாற்று வேலைகள்” என குற்றம்சாட்டினார். பா.ஜ.க மீது கல்வி நிதி ஒதுக்காமை, இருமொழிக் கொள்கைக்கு எதிரான திணிப்பு, நீட் தேர்வு, தமிழர் மீனவர்கள் பிரச்சினை, பேரிடர் நிவாரண நிதி ஒதுக்காமை போன்ற பல்வேறு விவகாரங்களில் துரோகமாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினார்.அதேபோல், முதல்வர் ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படவில்லை என பட்டியல் வகுத்து விமர்சித்தார்.
பெண்களுக்கு ரூ.1000, நீட் ரத்து, வேலைவாய்ப்பு, கல்விக் கடன் ரத்து, ஓய்வூதிய திட்டம் போன்ற வாக்குறுதிகளை “செஞ்சீங்களா?” என கேள்வி எழுப்பினார். தவெக பொய்யான வாக்குறுதிகள் தராது. கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளில் சமரசமே இல்லாமல் செயல்படும். ஊழல், குடும்ப ஆதிக்கம் இல்லாத உண்மையான மக்களாட்சி தமிழகம் எங்கள் இலக்கு என அவர் உறுதியளித்தார்