அன்புமணி இராமதாஸ் – நிதின் கட்கரி சந்திப்பு: தமிழக தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து முக்கிய கோரிக்கைகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை தில்லியில் சந்தித்து தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
முக்கிய கோரிக்கைகள்:
1. விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலை: விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரை எப்போதும் தாமதமாகும் பணிகளை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும்.
2. திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை: இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மேம்படுத்த வேண்டும்.
3. தேசிய நெடுஞ்சாலை எண் 47: சேலத்திலுள்ள மாமங்கலத்தில் சிறிய பாலம் கட்ட வேண்டும்.
4. சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலை: திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை முடிக்க வேண்டும்.
5. சென்னை - செங்கல்பட்டு பறக்கும் சாலை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரை பறக்கும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. வாணியம்பாடி - சேலம் நெடுஞ்சாலை: கோபிநத்தம்பட்டி குறுக்கு சாலை முதல் அயோத்தியாப் பட்டினம் வரை 4 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
7. ஓசூர் - தருமபுரி (NH 844): புளிக்கரை - நக்கல்பட்டி கிராமசாலை சந்திப்பில் சாலை மாற்றம் செய்ய வேண்டும்.
8. தொப்பூர் - பவானி NH-555H: மேச்சேரி அருகே எருமப்பட்டியில் சுங்கச்சாவடி அமைப்பதை கைவிட்டு, சாலையை அகலப்படுத்தி, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்த பிறகு சுங்கச்சாவடி அமைக்க வேண்டும்.
9. மேச்சேரி பேரூராட்சி புறவழிச்சாலை: மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலின் அருகே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
10. தருமபுரி - சேலம் நெடுஞ்சாலை:
கெங்கலாபுரம் முதல் குரும்பட்டி வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்.
சவுலூர் மேம்பாலத்தின் இருபுறத்திலும் சர்வீஸ் சாலை கட்ட வேண்டும்.
பாளையம்புத்தூர், சேஷம்பட்டி, தேவர் ஊத்துப்பள்ளம், புறவடை, ஜாகீர் – இந்த 5 இடங்களில் மேம்பாலம் கட்ட வேண்டும்.
11. தருமபுரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை:
குண்டல்பட்டி பகுதியில் திட்டமிடப்பட்ட மேம்பாலத்தைக் பழைய தருமபுரியில் அமைக்க வேண்டும்.
அன்புமணி இராமதாஸ் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் பரிசீலிக்க உறுதியளித்தார். இந்த சந்திப்பில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தருமபுரி எஸ்.பி. வெங்கடேஸ்வரன், சேலம் மேற்
கு அருள், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description