சிக்கல்கள் தீர்க்கும் சிவா -விஷ்ணு வழிபாடு!

மாசி மக நன்னாள்,
மாசியில் காவிரி முதலான நீர்நிலைகளில் நீராடினாலே புண்ணியம். அதிலும் மாசி மாதத்தின் மக நட்சத்திர நாளில், நீராடுவது மகத்தான புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாசி மாதம் என்றாலே மகம் நட்சத்திரம் நினைவுக்கு வரும். மகம் நட்சத்திரம் என்றாலே மாசி மகம் நினைவுக்கு வரும். மாசி மகம் என்றாலே வடக்கே நடைபெறுகிற கும்பமேளாவும், தெற்கே கும்பகோணத்தில் நடைபெறுகிற மகாமகத் திருவிழாவும் நினைவுக்கு வரும்.
