dark_mode
Image
  • Wednesday, 08 October 2025
பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி...!

பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி...!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று சீனாவின் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட நிலையில், தற்போது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் பல நாடுகளில் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று சீனாவின் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட நிலையில், தற்போது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால், அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.