dark_mode
Image
  • Sunday, 24 August 2025
திருச்செந்தூர் கோயிலில் மார்ச் 28-ல் பங்குனி உத்திர விழா...!

திருச்செந்தூர் கோயிலில் மார்ச் 28-ல் பங்குனி உத்திர விழா...!

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு 28-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து 6 மணிக்கு வள்ளியம்மன் தபசுக்கு புறப்பாடு, 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

மாலை 4 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி மேலக்கோயிலில் அம்மனுக்கு காட்சியருளுதலும், தொடர்ந்து பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி - அம்மன் தோள்மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். பின்னர், சுவாமி - அம்மன் வீதியுலா வந்து, கோயில் சேர்ந்ததும், இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவர் சன்னதி முன்பு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். இரவில் இராக்கால அபிஷேகம் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related_post