dark_mode
Image
  • Sunday, 24 August 2025
தான்சானியா அதிபர் காலமானார்...!

தான்சானியா அதிபர் காலமானார்...!

தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகபுலி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

கடந்த சில வாரங்களாக தான்சானியா நாட்டின் அதிபரான ஜான் மகபுலியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட இதய செயலிழப்பு காரணமாக கடந்த 17-ம் தேதி மாலை 6 மணியளவில் அவர் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக, எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் கொரோனா தொற்று பரவி வந்த நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டிவந்த ஜான் மகபுலி, கொரோனா வைரசை கடவுளால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே, நாட்டு மக்கள் அதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கூறி வந்துள்ளார். இவருடைய உடலுக்கு பொது மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.