dark_mode
Image
  • Sunday, 24 August 2025
சபரிமலையில் துவங்கியது உத்திர ஆராட்டு திருவிழா ..!

சபரிமலையில் துவங்கியது உத்திர ஆராட்டு திருவிழா ..!

சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக கடந்த, 14ம் தேதி நடை திறக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 'ஆன்லைன்' முன்பதிவு வாயிலாக, தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 10 நாள் உத்திர ஆராட்டு திருவிழா நேற்று காலை துவங்கியது.முன்னதாக, நேற்று காலை, 7:15 மணிக்கு கொடிப்பட்டத்துடன் மேல்சாந்தியும், தந்திரியும் கோவிலை வலம்வந்தனர். நெற்றிப்பட்டம் கட்டிய யானை கொடிமரம் முன்பு வந்தது. காலை, 7:30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு தங்க கொடிமரத்தில் கொடியேற்றினார். பக்தர்கள் சரணகோஷ முழக்கமிட்டனர்.வரும், 28ம் தேதி மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி சன்னிதானம் திரும்பியதும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

related_post