dark_mode
Image
  • Sunday, 24 August 2025
எடுத்த காரியங்களில் வெற்றி பெற இந்த ஸ்லோகம் சொல்லுங்க!

எடுத்த காரியங்களில் வெற்றி பெற இந்த ஸ்லோகம் சொல்லுங்க!

பாடல் 14

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னை
சந்திப்பவர்க்கு எளிதாம் -எம்பிராட்டி! நின் தண்ணளியே!

பொருள்:

உன்னை வழிபடுபவர்கள் வானவர்களும், அசுரர்களும் அன்பர்களும், அடியவர்களும். உன்னை மனத்தில் வைத்து தியானிப்பவர்கள் நான்முகனும் நாராயணனும். ஆதியும் அந்தமுமில்லா பரமானந்தமான சிவபெருமானும் உன்னுடன் சேர்ந்து உன் வசமேயானார். இவ்வுலகத்திலுள்ள உன் திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடுபவர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது உனதருள். அபிராமி அன்னையே! உன் கருணைக்கும் ஒரு எல்லை உண்டோ? அம்பிகையை மனதில் தியானித்து இந்த பாடலை தினமும் பாடி வர எதிலும் முதன்மை பெறலாம் என்பது நம்பிக்கை.

related_post