dark_mode
Image
  • Sunday, 24 August 2025
உலக கொரோனா நிலவரம்

உலக கொரோனா நிலவரம்

25.19 லட்சம் பேர் உயிரிழப்பு;

11.35 கோடி பேர் பாதிப்பு;

89.12 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,519,255 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 113,543,452 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 89,128,252 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 91,417 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 113,543,452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 89,128,252 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 19 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 21,895,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91,417 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.