CM MK Stalin:'உங்களின் ஒருவன்'; நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

'உங்களின் ஒருவன்' ' கள ஆய்வில் முதலமைச்சர்' ஆகிய திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 5, 6 தேதிகளில் கோயம்புத்தூரில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
'மக்களுக்காகத்தான்ம் அரசு!மக்களை மையப்படுத்திய இயங்குவதான் நல்லரசு!' என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கீழ் அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் மக்களுக்கான சேவைகளை சரியாக செய்கிறார்களா, மக்கள் மனநிறைவுடன் பயனடைகிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ' உங்களில் ஒருவர்ன்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்தப் முக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் செயல்பட்டுத்தப்படு வரும் அரசு திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்வார்.
அதன்படி, வரும் நவம்பர் மாதம் 5,6, ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலுன் வெளியிடுள்ள செய்தியில்,' நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்!' என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,' கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்!' தி.மு.க.வின் செய்லபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தொண்டர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description