4-ம் நாள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் மழையால் ரத்து !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழையால் தாமதமாகும் என கூறப்பட்ட நிலையில் மழையால் 4 வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராட்கோலி 44 ரன்களும் ரஹானே 49 ரன்களும் எடுத்தனர் .
இங்கிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. டெவொன் கான்வெ 54 ரன்களும், டாம் லாத்தம் 30 ரன்களும் எடுத்துள்ளார்கள். அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழையால் தாமதமாகியுள்ளது. ஏற்கனவே முதல்நாள் மழையால் கைவிடப்பட்டு ரிஸர்வ்ட் நாளான 23 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது .
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ன் 4 வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description