dark_mode
Image
  • Thursday, 14 August 2025

3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: 'தமிழகத்தில் நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், காரைக்காலில் 11 செ,மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடில் தலா, 10; பெரம்பலுார் மாவட்டம் தழுதலை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா, 9; திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் தலா, 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.