வீடியோ காலில் வரச் சொன்ன செங்கல்பட்டு கல்லூரி மாணவி.. மாட்டிய 'யூத்' சுரேஷ்.. மறக்க முடியாத ட்விஸ்ட் சென்னை: இன்றைக்கு 2கே கிட்ஸ்

இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் பலர் இன்ஸ்டாகிராமிலும் ஸ்னாப் சாட், பேஸ்புக், ட்விட்டர் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். சமூக வலைதளங்களில் முகம் தெரியாதவர்களிடம் சாட்டிங் செய்வதை தாண்டி, அவர்களை காதலிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி யூத் என்று நினைத்து மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 38 வயது நபருடன் பழகி உள்ளார். வீடியோ காலுக்கு வரச்சொல்லும் போது தான் ட்விஸ்ட் நடந்துள்ளது.
ஒரு திரைப்படம்ஒன்றில் யோகிபாபு பிரபல ஹாலிவுட் பிரபலம் போல் புகைப்படத்தை காட்டி மோசடி செய்வதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதுபோல் இன்றைக்கு சில நடுத்தர வயது நபர்கள், தங்களை இளமையான ஹீரோ போன்ற போட்டாக்களை காட்டி சாட்டிங் செய்து பெண்களை ஏமாற்றுகிறார்கள்.. பெண்களும் அழகான ஹீரோ போல் இருக்கிறார் என்று நினைத்து ஏமாறுகிறார்கள். சிலர் நேரில் பார்க்காமல் பழகாமல், திருமணம் செய்து கொள்ளாமலேயே அந்தரங்க புகைப்படங்களை சாட்டிங் நண்பன் கேட்கிறான் என்பதை அனுப்புகிறார்கள்.சிலர் வீடியோ எடுத்து அனுப்புகிறார்கள். சிலர் வீடியோ காலில் கூட தோன்றுகிறார்கள்.இதை வைத்துபிளாக்மெயில் செய்து அந்த பெண்களை காலி செய்கிறார்கள் சில நடுத்தர வயது ஆசாமிகள்..
அப்படித்தான் சேட்டிங் ஆப்பில் இளைஞர் போல நடித்து கல்லூரி மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை காட்டி மிரட்டிய 38 வயது நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்னாப் சாட் செயலில் கல்லூரி மாணவியுடன் பழகி தனிப்பட்ட புகைப்படங்களை காட்டி மிரட்டிய காவலாளி எப்படி அந்த பெண் கண்டுபிடித்தார் என்பதை பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த மாதம் அவரது செல்போனில் ஸ்னாப் சாட் (snapchat) என்ற செயலி வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தான் சென்னையை சேர்ந்த 25 வயது இளைஞர் எனக்கூறி அறிமுகமாகியிருக்கிறார்கள்.
சமூக வலைதள கணக்கில் இருந்த அவரது புகைப்படத்தை கண்ட மாணவி, புகைப்படம் மிகவும் அழககாக இருந்தால், தொடர்ந்து பேசி பழகியுள்ளார். தொடர்ந்து தனது புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். நாளடைவில் அந்த நபர் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக பல்வேறு கவர்ச்சிகரமான ஆசைவார்த்தை கூறி தனிப்பட்ட புகைப்படங்களையும் கேட்டிருக்கிறார். பின்னர் அந்த நபரின் பேச்சில் சந்தேகமடைந்த மாணவி வீடியோ காலில் வரும் படி அழைத்திருக்கிறார். ஆனால் அந்த நபர் அதற்கு மறுத்து வந்துள்ளார். இதனால் குழப்பமடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த அண்ணன் தங்கை.. உடல் பருமனால் அவதி.. கோவை ஓட்டல் அறையில் பரிதாப முடிவு"
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துவிடுவேன் என மிரட்ட தொடங்கி உள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். தொடர்ந்து மாணவி கொடுத்த சமூக வலைதள கணக்கை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் (38) என்பதை கண்டுபிடித்தனர் மேலும், இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும் அதேவேளையில் பகுதி நேர 'பைக் டாக்ஸி' ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இவரை கைது செய்த போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
BY.PTS NEWS M.KARTHIK
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description