நீங்கள் அரசியலுக்கு போகவில்லை என்றால் அரசியல் உங்கள் வீடு தேடி வரும்- கமல் ஹாசன்
Cultural excellence விருது திருநங்கை ஆயிஷா பாத்திமாவிற்கு கமல்ஹாசன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
மாற்றம் நம்மிலிருந்து துவங்க வேண்டும். காந்தி வந்தவுடன் சுதந்திரம் வாங்கி தரவில்லை. காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாற்பது வருடம் போராடியிருகிறார்.
மாற்ற வேண்டும் என எவனோ ஒரு சின்ன ஆள் நினைச்சாலும் அடுத்த நிமிஷமே பெரிய ஆளாக மாறிவிடுவான். நீங்கள் மாற்றத்தின் விதையாக இருக்க வேண்டும்..
நான் தாமதமாக வந்தற்கு தண்டனை இது. வந்த வேலை முடித்து விட்டுத்தான் செல்வேன். அதுபோருக்கும் பொருந்தும் நற்பணிக்கும் பொருந்தும். அகிம்சை என்று என் குருநாதர் பயன்படுத்திய வார்த்தையை தொடர்ந்து பரப்பி கொண்டிருக்கிறேன்.
காந்தியை ஒருபோதும் மகாத்மா என நான் அழைப்பதில்லை. நான் அவர் சந்ததி என நம்புகிறேன். இரண்டு முறை புடவை கட்டி நடித்திருக்கிறேன். இப்படியே பிறந்திருக்கலாம் எனகூட எண்ணி இருக்கிறேன்.
பெண்கள் பெருமை கொள்ள வேண்டியவர்கள். அவர்களை துட்சமாக நினைப்பது ஆண்களின் பொறாமையால் வரும் விஷயம். தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட 35,000 குழந்தைகளில் இரண்டாயிரம் குழந்தைகளுக்கு தந்தையாக மாறினோம்.
இன்று என் வீட்டு பெண்களுக்கு விருதுகள் வழங்கி இருக்கிறேன். பெண்களுக்கு அரசு, ஊதியம் வழங்க வேண்டும் என கூறியது யோசிக்காமல் கூறியது அல்ல.
தாய் நாடு, தாய் மண் என கூறுகிறீர்கள் ஏன் இன்னும் செய்யவில்லை. சொன்னால் மட்டும் போதாது. அரசியல் எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என நீங்கள் அரசியலுக்கு போகவில்லை என்றால் அரசியல் உங்கள் வீடு தேடி வரும். வாக்குக்கு பணம் ஏமாந்து வாங்கலாமா? பெயர் சொல்ல வேண்டியதில்லை. ஊருக்கே தெரியும்.
ரௌத்திரம் பழகுங்கள்,பழகுவதற்கான நேரம் வந்துவிட்டது. அடுத்த தலைமுறை ஆடிப் பார்க்க வேண்டும் என இந்த கலைகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தேன்.
கலையை பேசாமல் அரசியலை மட்டும் பேசிக்கொண்டிருந்தால் மண்ணை தின்று கொண்டிருப்பதுபோல் இருக்கும். கடைநிலை இந்தியனின் குரல் பாரளுமன்றத்தில் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான். தனது நாட்டை காக்க் குரல் வேண்டாமா? விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமானல் மண்ணுக்கு அடியில் இருக்கும் வைரம், எண்ணெய் தொடாதே!!
தமிழ்நாட்டை காக்க ஒட்டு போடுங்க. நாங்களும் துப்பரவு தொழிலாளர்கள். மிகவும் கேவலமான சூழ்நிலையில் இறங்கி இருக்கிறோம். ஊழல் நோய் பரவி இருக்கிறது என்று கமல் ஹாசன் பேசினார்.