நிர்வாகிகளுடன் த.வெ.க. தலைவர் விஜய் நாளை ஆலோசனை..!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாகக் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில், மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் இன்னும் பேசுபொருளாகவுள்ளது.
ஏற்கனவே, பல அரசியல் கட்சித் தலைவர்களும் மாநாடு நடந்த அடுத்த நாளில் பேசிக்கொண்டு இருந்த நிலையில், இப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் காரணத்தால் விஜய் பேசிய விஷயங்கள் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
இந்த சூழலில், நாளை தவெக நிர்வாகிகளின் அவசர கூட்டம் பனையூரில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அக்கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு முக்கியமான ஆலோசனைகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநாட்டுக்குப் பிறகு அரசியல் காட்சிகள் வைத்த விமர்சனங்கள் குறித்துப் பேசப்படவுள்ளதாகவும், சுற்றுப் பயணம் உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முன்னதாகவே, இன்று காலை டிசம்பர் 27-ம் தேதி முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த சுற்றுப் பயணம் செல்வதற்கு எனவே பிரத்தியேக வாகனம் ஒன்றும் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே, இதனைப் பற்றிப் பேசுவதற்குத் தான் நாளை அவசரமாக ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனை முடிந்த பிறகு அங்கு என்னென்ன விஷயங்கள் பற்றிப் பேசி முடிவெடுக்கப் பட்டது என்பதெல்லாம் தெரிய வரும். நாளை நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description