dark_mode
Image
  • Friday, 04 April 2025

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

 

இந்த நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை, காலை 9.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர், மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

 

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜைகள் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..

comment / reply_from

related_post