dark_mode
Image
  • Thursday, 29 January 2026

தை பிறந்தா வலிதான் பிறக்கும்!.. எல்லாரும் போய்ட்டாங்க!.. காலியான ஓபிஎஸ் கூடாரம்!

தை பிறந்தா வலிதான் பிறக்கும்!.. எல்லாரும் போய்ட்டாங்க!.. காலியான ஓபிஎஸ் கூடாரம்!

ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதும் அவர் மரணமடைந்த போதும் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் சசிகலா தயவில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர பதவியில் அமர சில நாட்கள் தர்ம யுத்தம் நடத்தி வந்தார் ஓ பன்னீர்செல்வம்.

ஆனால் பாஜக எடுத்த நடவடிக்கையால் தர்ம யுத்தத்தை கேன்சல் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்தார் ஒபிஎஸ். அதன் பின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கட்சியை வழிநடத்தினார்கள். ஆனால் எதிர்கட்சித் தலைவர் பதவி எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்தது.

 

எனவே கட்சிக்குள்ளயே பூசல்களை ஏற்படுத்தி வந்தார் ஓபிஎஸ். ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்ஐ கட்சியை விட்டு வெளியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. அதேநேரம் இப்போது வரை புதிதாக அரசியல் கட்சியை ஓபிஎஸ் தொடங்கவில்லை. மேலும், அவரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவும் எடப்பாடி பழனிச்சாமி தயாராக இல்லை. இது தொடர்பாக பாஜக எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டது.

 

கடந்த சில தேர்தல்களில் சுயேட்சையாகவே போட்டியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைப்பார் என்கிற் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியை விட்டு ஓ பன்னீர்செல்வம் சென்றபோது அவருடன் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம். ஐயப்பன் போன்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்றனர்.

ஆனால் இப்போது வரை ஒரு திடமான முடிவை ஓபிஎஸ் எடுக்கவில்லை. பழனிசாமியின் பிடிவாதத்தால் பாஜகவும் அவரை கைவிட்டுவிட்டது. எனவேதான் மனோஜ் பாண்டியன் ஏற்கனவே தனது எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து விட்டார். அதேபோல் ஜேடிசி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.

 

இன்று காலை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்துவிட்டார்.

மிச்சமிருப்பது எம்எல்ஏ ஐயப்பன் மட்டும்தான். அதேபோல் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருந்த வெல்லமண்டி நடராஜன், ராமச்சந்திரன் ஆகியோரும் விரைவில் திமுகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு செய்திகளிடம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என சொன்னார் பன்னீர்செல்வம். அரசியலில் நினைத்தது நடக்கவில்லை என்றால் இந்த வலிதான் பிறக்கும் என நக்கலடிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

related_post