தீபாவளியை முன்னிட்டு தாம்பரம்- நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக நாளை (அக்.30) தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி 7,810 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,086 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று (அக்டோபர் 28), அக்.29 மற்றும் அக்.30 ஆகிய தேதிகளில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்று வழக்கமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக நாளை (அக்.30) தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மதுரை, நெல்லை வழியாக காலை 4.40க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. அதே ரயில் மறுமார்க்கத்தில் அக்.31ம் தேதி காலை 8.45க்கு புறப்பட்டு இரவு 9.55க்கு தாம்பரம் வந்தடைகிறது