dark_mode
Image
  • Friday, 07 March 2025

"திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடியின் தமிழ் வாழ்த்து: திருக்குறள் உலகத்திற்கும் இந்தியத்திற்கும் வரம்"

இன்று தமிழக முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்துக்களை தமிழில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:
 
 
 
நமது நாட்டின் மிகச்சிறந்த தத்துவஞானிகள், புலவர்கள் மற்றும்  சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரைத் திருவள்ளுவர் தினத்தில் நாம் நினைவுகூர்வோம். அவர் இயற்றிய திருக்குறள் தமிழ் கலாச்சாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது. அவரது போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. 
 
எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் அவரது படைப்பான   திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. பலவகையான பிரச்சனைகள் குறித்து ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. நமது சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம்  தொடர்ந்து கடினமாகப்  பணியாற்றுவோம்.
 
 

comment / reply_from

related_post