dark_mode
Image
  • Friday, 29 November 2024

டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசு தொகையை வெளியிட்டது ஐசிசி.!!

டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசு தொகையை வெளியிட்டது ஐசிசி.!!

ஐக்கியஅரபு அமீரகத்தில் இம்மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், 2-வது இடம் பெறும் அணிக்குமான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் வரும் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 16 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டியின் மொத்தப் பரிசுத் தொகையாக 56 லட்சம் டாலர்கள்(ரூ.42கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது ஐசிசி. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 16 லட்சம் டாலர்கள்(ரூ.12 கோடி) பரிசாகவும், 2-வது இடம் பெறும் அணிக்கு 8 லட்சம் டாலர்கள்(ரூ.6 கோடி) பரிசாக வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடக்கும் அரையிறுதியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கும் தலா 4 லட்சம் டாலர்கள்(ரூ.3 கோடி) பரிசு வழங்கப்படும். அரையிறுதிக்குள் செல்லாமல் தோல்வி அடைந்து வெறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் டாலர்கள்(ரூ.52 லட்சம்) பரிசுத் தொகையும், முதல் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா 40ஆயிரம் டாலர்கள்(ரூ.30 லட்சம்) பரிசாக வழங்கப்படும். கடந்த 2016ம் ஆண்டைப் போல் சூப்பர் 12 சுற்றில் வெல்லும் ஒவ்வொரு அணிக்கும் போனஸ் தொகையும் வழங்கப்படும். போட்டி நடக்கும்போது இடைவெளி விடுதலுக்கு நேரத்தை ஐசிசி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு இன்னிங்ஸ் நடுப்பகுதியிலும் 2.30 நிமிடங்கள் இடைவெளிவிடப்படும்.

டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசு தொகையை வெளியிட்டது ஐசிசி.!!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description