சமையல் எரிவாயுவின் எடை அறியும் புதிய முறையை அறிமுகம் செய்ய முடிவு.!!!
சமையல் எரிவாயுவின் எடை சரியாக உள்ளதாக என்பதை அறியும் புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சமையல் எரிவாயுவில் கியூஆர் கோடு பொருத்தப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் தங்கள் போனில் அந்த கோடை ஸ்கேன் செய்தால் போதும் அதில் எரிவாயுவின் எடை, எந்த ஆலையில் நிரப்பப்பட்டது, அதன் தேதி, ஏஜன்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறியலாம். சமையல் எரிவாயுவின் எடை முறைகேட்டை தடுக்க இந்த முடிவு மேற்கொள்ளப்போவதாக எரிவாயு நிறுவனங்கள் கூறியுள்ளது.