
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா துவக்கம்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது.தமிழகத்தில் சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுவது சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழக அளவில் அதிக வருவாய் ஈட்டும் கோயில்களில் 2வது இடம் வகிக்கிறது. இந்த கோயிலில் நடக்கும் பல்வேறு திருவிழாக்களில் முதன்மையான விழாவாக பக்தர்கள் கருதுவது பூச்சொரிதல் விழா.