குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் தினசரி கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 382 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக தமிழக துகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.