ஐப்பசி மாத பூஜை - #Sabarimala ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (அக்.16) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக நடை இன்று (அக்.16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார். தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து அக்.21 ம் தேதி வரை ஐப்பசி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பின்னர் அன்றிரவு (அக்.21) 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதனை தொடர்ந்து மன்னர் பாலராம வர்ம மகராஜா பிறந்த நாளில் நடைபெறும் விசேஷ பூஜையான சித்திர ஆட்டத் திருநாளுக்காக அக்.30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு 31 -ஆம் தேதி இரவு அடைக்கப்படுகிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description