எல்.இ.டி, கத்தி போன்ற பொருட்களுக்கு புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் எந்தெந்த பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்றும் எந்தப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் பார்ப்போம்.
- இறைச்சி, மீன், தயிர், பனீர் மற்றும் தேன் போன்ற பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ) இப்போது 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
- பிராண்ட் அல்லாத உதாரணத்துக்கு மாவு மற்றும் அரிசி போன்ற பொருட்கள் முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்டு லேபிளிடப்பட்டிருந்தால், 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். தற்போது, இந்த பிராண்டட் பொருட்கள் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டியை வரி விதிக்கப்படுகிறது.
- உலர்ந்த பருப்பு காய்கறிகள், துமை மற்றும் பிற தானியங்கள், கோதுமை, வெல்லம், உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ஆர்கானிக் உரம், தென்னை நார் ஆகியவற்றிற்கு இப்போது 5 சதவீத வரி விதிக்கப்படும்.
- உணவுப் பொருட்கள் தவிர வங்கிகள் காசோலைகள் வழங்குவதற்கு 18 சதவீத வரி விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அச்சிடுதல், எழுதுதல் மற்றும் வரைதல் மை, கத்திகள், கரண்டிகள் மற்றும் பாத்திரங்கள், எல்இடி விளக்குகள் மற்றும் வரைதல் கருவிகள் போன்ற பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதம் 12% லிருந்து 18% ஆக உயர்த்தப்படவுள்ளது.
- சோலார் வாட்டர் ஹீட்டர்கள் மற்றும் தோல் பொருட்களுக்கு 5% முதல் 12% வரை வரி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாளொன்றுக்கு ரூ.1,000க்கும் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும்.
- அஞ்சல் அட்டை, புக் போஸ்ட், 10 கிராமுக்கு குறைவான கடித உறைகள் ஆகியவற்றை தவிர அனைத்து அஞ்சலக சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது ஹோட்டல் வாடகை மீதான ஜிஎஸ்டி வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றின் மீது 28 சதவீத வரி விதிப்பது குறித்தும் இன்று நடைபெறும் 2ஆவது நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் வலியுறுத்தி வருகின்றன. அதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.