'எனக்கு சூப்பர் பவர் இருக்கு'.. டெஸ்ட் செய்ய 4வது மாடியில் இருந்து குதித்த மாணவர்!

ஒரு பி.டெக் மாணவர் தன்னிடம் சூப்பர் பவர் இருப்பதாக நம்புகிறார். சக மாணவர்களிடம் தனக்கு இந்த சக்தி இருப்பதாக பல நாட்களாக கூறி வந்துள்ளார்.
திங்கள்கிழமை, அந்த சக்தி என்ன என்பதைக் காட்ட விடுதி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அவ்வளவுதான்... கால், கை, தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முழு விவரம் என்ன என்பதை பார்ப்போம்.. கோவை மாவட்டம் கற்பகம் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வரும் 19 வயதான பிரபு, தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நம்பி வாழ்ந்து வந்துள்ளார். தன்னிடம் சக்தி இருப்பதாக சக மாணவர்களிடம் பலமுறை கூறி வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை கூட கல்லூரி விடுதியின் 4வது மாடி வராண்டாவில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது மாணவர்கள் கொடுத்த சவாலின் பேரில், திடீரென ஓடி வந்து அங்கிருந்து குதித்தார். இதனால் அவரது கால்கள் மற்றும் கைகள் உடைந்தன. தலையில் பலத்த காயம். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description