உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

பெஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியா தரும் தண்ணீரை நம்பி பாகிஸ்தானில் உள்ள 50% மக்கள் வாழ்கிறார்கள். அது மட்டும் இன்றி, பாகிஸ்தான் விவசாயத்தில் 90% தண்ணீர் இந்தியா தரும் தண்ணீரில் இருந்து பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தியா திடீரென தண்ணீர் பகிரும் ஒப்பந்தத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீண்டும் ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என்று கூறியதை அடுத்து, இந்தியா ஒரு மறைமுகமாக வாட்டர் போரை தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே உலகின் பல நிபுணர்கள், மூன்றாவது உலகப்போர் ஒருவேளை நடந்தால் அது தண்ணீருக்காக தான் நடைபெறும் என்றும், உலகளவில் தண்ணீரின் அளவு குறைந்து வருவதாகவும் கூறியிருந்தனர். அந்த வகையில், இந்தியா முதன்முதலாக வாட்டர் போரை ஆரம்பிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இந்த போர் உலகப்போராக நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் ஆதரவு தருமே தவிர, பாகிஸ்தானுக்கு எந்த நாடும் ஆதரவு தர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description