dark_mode
Image
  • Friday, 29 November 2024

ஆசிய கோப்பை: இஷான் கிஷான் , ஹர்திக் பாண்டியா அரைசதம்....இந்திய அணி 266 ரன்கள் சேர்ப்பு

ஆசிய கோப்பை: இஷான் கிஷான் , ஹர்திக் பாண்டியா அரைசதம்....இந்திய அணி 266 ரன்கள் சேர்ப்பு

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் மோதுகின்றன .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது

தொடக்கத்தில் ரோகித் சர்மா 11 ரன்களில் ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடித்து வந்த விராட் கோலி 4 ரன்களுக்கு , ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் கில் 10 ரன்களில் வெளியேறினார்.இதனால் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை தொடர்ந்து இஷான் கிஷான் , ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் 54 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார். இதனை தொடர்ந்து இருவரும் அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.இதனால் இந்திய அணியின் ரன் ரேட் அதிரடியாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் 82 ரன்கள் , ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.அடுத்து களமிறங்கிய ஜடேஜா பந்துவீச்சில் 14 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 48.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 266ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட் , ஹாரிப் ரவுப், நசீம் ஷா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து ரன்கள் 267இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.

 

ஆசிய கோப்பை: இஷான் கிஷான் , ஹர்திக் பாண்டியா அரைசதம்....இந்திய அணி 266 ரன்கள் சேர்ப்பு

comment / reply_from

related_post

newsletter

newsletter_description