dark_mode
Image
  • Friday, 07 March 2025

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: மதுரை முதல் சென்னை வரை நீதி பேரணி - பாஜக மகளிர் அணி அறிவிப்பு

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: மதுரை முதல் சென்னை வரை நீதி பேரணி - பாஜக மகளிர் அணி அறிவிப்பு
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் நீதி கேட்டு மதுரை - சென்னை நீதிப்பேரணி நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பாஜக மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் திருமதி உமா ரதி  அவர்கள் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது. 
 
வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களைச் சந்தித்து, பாஜக  மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
 
அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: மதுரை முதல் சென்னை வரை நீதி பேரணி - பாஜக மகளிர் அணி அறிவிப்பு

comment / reply_from

related_post