2030 க்குள் சர்வதேச தரத்தில் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் : பிரதமர்
புதிய சரக்கு போக்குவரத்து கொள்கை பொருளாதார கொள்கைக்கு ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி பேசினார்.
உலக சரக்கு போக்குவரத்தில் இந்தியா முக்கிய மையமாக உருவெடுக்கும் என சரக்கு போக்குவரத்து கொள்கையை வெளியிட்டு பிரதமர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: சரக்கு போக்குவரத்து செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2030 ம் ஆண்டுக்குள் உலகத்தரம் வாய்ந்த சரக்கு போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். புதிய சரக்கு போக்குவரத்து கொள்கை நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆற்றலையும் வளர்ச்சியையும் கொண்டு வருகிறது.
இந்தியா ஒரு உற்பத்தி மையமாக வளர்ந்து வருகிறது. பெரிய ஏற்றுமதி இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு கூறினார்.
இந்தியா ஒரு உற்பத்தி மையமாக வளர்ந்து வருகிறது. பெரிய ஏற்றுமதி இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு கூறினார்.