15 மாநிலங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்கீடு; தமிழகத்துக்கு ரூ.50 கோடி!
15 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியாக மொத்தம் ரூ.1115 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
புதுடில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங், நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு கூடி, இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது. அதன்படி பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.
இதுதவிர, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.115.67 கோடி முன்மொழியப்பட்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியம் கீழ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 15 மாநிலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை தணிப்பதற்கான முன்மொழிவுக்கு தேசியபேரிடர் தணிப்பு நிதியில் இருந்து ரூ.1,000 கோடி நிதி அளிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது.