ஹஜ் புனித யாத்திரை தொடங்கிய பயணிகள்..!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதீனாவுக்கு ஹஜ் பயணிகளை ஏற்றி கொண்டு, நேற்று அதிகாலை 2.20 மணியளவில் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
இது பற்றி டெல்லி ஹஜ் கமிட்டியின் தலைவர் கவுசர் ஜகான் செய்தியாளர்களிடம் கூறும் போது, விமானத்தில், 285 ஹஜ் பயணிகள் பயணித்தனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் மொத்தம் 16,500 பேர் டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்வார்கள் என்றும் ஜகான் கூறியுள்ளார். இதற்கு முன் கடந்த செவ்வாய் கிழமையன்று, ஜெட்டா மற்றும் மதீனா நகரங்களில் நடப்பு ஆண்டிற்கான ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை செயலாளர் முக்தேஷ் கே. பர்தேஷி மறுஆய்வு மேற்கொண்டார்.
2024 ஹஜ் ஒதுக்கீட்டின்படி, சவுதி அரேபியாவுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description