லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டு சென்றார்.பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத்,96 கடந்த 8-ம் தேதி வயது மூப்பு உடல்நலக்குறைவால் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மறையில் காலமானார்.
கடந்த 13-ந்தேதி லண்டன் கொண்டுவரப்பட்டது. செப்.19-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் அருகே இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை தனி விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச்சென்றார்.