பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்ற பீதி நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டல் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல அமைந்துள்ளது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்தியா, 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானியர்களை இந்தியாவிலிருந்து வெளியேற கெடு விதித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு பதிலடி தருவதற்காக பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்புக்கு நடுவே தற்போது மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் “பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு வருவதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானியர்களை இந்தியா தாக்கினால், இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது. நாங்கள் தற்காப்புக்காக தயார் நிலையிலேயே உள்ளோம். தக்க பதிலடி கொடுப்போம்” என்று பேசியுள்ளார். இது மேலும் போர் மூளும் சூழலை தீவிரப்படுத்தி வருவதாக தெரிகிறது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description