dark_mode
Image
  • Friday, 18 April 2025

பஸ் மோதி 8 பேர் பலி - பிரதமர் இரங்கல்.!!

பஸ் மோதி 8 பேர் பலி - பிரதமர் இரங்கல்.!!
உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் அருகே உள்ள பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் ஒரு சொகுசு பஸ் டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிகாலையில் பஸ் நரேந்திராபூர் மத்ராஹா கிராமம் அருகே லோனிக்திரா என்ற பகுதியில் வேகமாக வந்தது. அப்போது, பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற டபுள் டக்கர் பஸ் என்ஜின் பழுது காரணமாக சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் 50 பயணிகளுடன் சென்ற சொகுசு பஸ், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆனது. மருத்துவமனையில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார். அத்துடன், பலியானோர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
பஸ் மோதி 8 பேர் பலி - பிரதமர் இரங்கல்.!!

comment / reply_from

related_post