பலாத்காரம், 6 முறை கருக்கலைப்பு..விஜயலட்சுமி வழக்கில் நீதிபதி கருத்து- சீமான் 'அசால்ட்' பதில்!

மதுரை: நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார், மிரட்டல் விடுத்தார், புகார்களை வாபஸ் பெற்றார் என்கிற நீதிபதியின் கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதிலளித்துள்ளார். மேலும் விசாரணை முடிவு வரட்டும்.. பொறுத்திருங்கள் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் மீதான நடிகை விஜயலட்சுமியின் வழக்கு படுதீவிரம் அடைந்துள்ளது. தம் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.
அப்போது, குடும்ப பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு சீமானை நடிகை விஜயலட்சுமி அணுகி இருக்கிறார்; அப்போது விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து உறவு வைத்திருந்தார் சீமான். ஆனால் சீமான், திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சீமான் மீது விஜயலட்சுமிக்கு எந்த ஒரு காதலும் இல்லை. 2008-ம் ஆண்டே இருவரும் மதுரை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் வற்புறுத்தியதால் 6 முறை தாம் கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் சீமான் பெருந்தொகையான பணத்தை மோசடி செய்துவிட்டார் எனவும் நடிகை விஜயலட்சுமி கூறியிருக்கிறார். விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இதனால் சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார். ஆனால் இந்த பலாத்கார புகார் தீவிரமானது; ஆகையால் சீமான் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சீமான் மீதான புகாரை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும்; 12 வாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி இளந்திரையன் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், நாம் தமிழர் கட்சியினர் மிரட்டியதால் புகார்களை வாபஸ் பெற்றதாக நடிகை விஜயலட்சுமி சொல்லவில்லை. நீதிபதிதான் அப்படி சொல்லி இருக்கிறார். விசாரணை இருக்கிறது அல்லவா? விசாரிக்கனும் இல்லையா? விசாரணை முடிவடையட்டும். பொறுத்திருங்க.. அதுக்குள்ள அவசரப்படாதீங்க.. இவ்வாறு சீமான் கூறினார்
BY.PTS NEWS M.KARTHIK.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description