dark_mode
Image
  • Saturday, 19 April 2025

சபரிமலை கோவிலில் அலங்காரத்துக்கு வாசமில்லா மலர்களை பயன்படுத்த கூடாது

சபரிமலை கோவிலில் அலங்காரத்துக்கு வாசமில்லா மலர்களை பயன்படுத்த கூடாது

சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசன் நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை விவகாரங்களை கவனிக்கும், சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அணில் கே நரேந்திரன், முரளி கிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள்:

மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில், சபரிமலை அய்யப்பன் கோவிலை அலங்கரிக்க வண்ணப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும், ஆர்கிட் வகையைச் சார்ந்தவை.

நீண்ட நேரம் வாடாமல் இருப்பதால், இந்த பூக்களை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற பூக்களை பயன்படுத்தக்கூடாது, ஐதீக முறைப்படியான பூக்கள் பயன்படுத்துவதை திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும்.

அப்பம் மற்றும் அரவணை தரம் குறித்து கண்காணிக்க, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

சபரிமலை கோவிலில் அலங்காரத்துக்கு வாசமில்லா மலர்களை பயன்படுத்த கூடாது

comment / reply_from

related_post