dark_mode
Image
  • Sunday, 23 November 2025

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெறாது: வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெறாது: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலமாக வலுவடையாது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5:30 மணிக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. . இது இன்று னெ்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் இந்த எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக வலுப்பெறாது எனத் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட மாவட்டங்கள்- புதுச்சேரி- தெற்கு ஆந்திராவை 24 மணி நேரத்தில் அடையும் எனக்கூறியுள்ளது.

related_post