பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!
பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கப்படும். கடந்த ஆண்டுகளில் தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிடும். அதே போல் இந்த ஆண்டுக்கான டிக்கெட் புக்கிங் செய்ய மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
தமிழ்நாட்டில் குடும்பங்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பண்டிகை சீசனில் ரயில் டிக்கெட் தேவை அதிகரிப்பதால், இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் 60 நாட்கள் முன்பு முன்பதிவு வசதி வழங்குகிறது. இது பயணிகளுக்கு கன்பார்ம் டிக்கெட் பெற உதவுகிறது மற்றும் கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்கிறது. அதன்படி பொங்கல் பண்டிகைக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
ஜனவரி 11 முதல் 18 வரை பயணம் செய்ய விரும்புவோர் நவம்பர் 12 முதல் 19 வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஒவ்வொரு பயணத் தேதிக்கும் அதற்கேற்ற முன்பதிவு தேதி உள்ளது. இது பயணத்திற்கு சரியாக 60 நாட்களுக்கு முன்பே திறக்கப்படும். தெற்கு ரயில்வே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.