"புழல் சிறையில் படித்தவர், ஆக்ஸ்போர்ட் பற்றி பேசுகிறாரே" - அண்ணாமலையின் கேள்வி சர்ச்சை
ஒரு வருஷம் ஜெயில் கம்பி எண்ணுனவன் நீ, பள்ளிக்கூடம் ஆவது சென்றதுண்டா? அமலாக்கத்துறை கேசில் உள்ள போன நீயெல்லாம் என் மேல் கேஸ் போட்டு எப்.ஐ.ஆர் வாங்கணும்னு என்னுடைய தலைவிதி என்று அண்ணாமலை பேட்டியில் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதானி விவகாரத்தில் பாஜக அறிக்கை வெளியிட்டதற்கு பதில் அளிக்காமல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நான் படித்தது பற்றி ஜாமினில் வெளிவந்துள்ள அமைச்சர் பேசியுள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நான் படித்த போது, அவர் புழல் சிறையில் படித்துக் கொண்டிருந்தார். தைரியம் இருந்தால் என் மேல் வழக்கு தொடரட்டும் என்று கேள்வி ஒன்றுக்கு அண்ணாமலை பதிலளித்தார்.
பொதுவாக பெயிலானவர்தான் பாஸ் ஆனவரை பார்த்து பொறாமைப்படுவார்கள். ஆனால் ஜாமீன் அமைச்சருக்கு என்மேல் பொறாமை, கேட்ட கேள்விக்கு பதில் வரவேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதானிக்கு 77 கோடி ரூபாய் திட்டம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? அதை விட்டுவிட்டு சுற்றி வளைக்கிற வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம். நீ சரியான ஆளாக இருந்தால் என் மேல் கேஸ் போடு பார்த்துக்கலாம். இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்றும் அண்ணாமலை கூறினார்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை குறிப்பிடாமலே அவரை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்ததும் குறிப்பாக ஒருமையில் விமர்சனம் செய்ததும் பெரும் சர்ச்சையாகி உள்ளது.