அந்த அறிவுகூட இல்லை அந்த ஆளுக்கு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
பிறப்பால் இங்கு யாரும் முதல்வராவதில்லை; மக்கள் தேர்ந்தெடுத்துதான் முதல்வராகி உள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நடைபெற்ற அம்பேத்கர் புத்தக விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "பிறப்பால் இங்கு யாரும் முதல்வராக கூடாது" என்றும் கூறியது, பரவலாக உதயநிதியை மறைமுகமாக தாக்கியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு இன்று பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "யார் இங்கே பிறப்பால் முதல்வரானது? மக்கள் தேர்ந்தெடுத்துதான் துணை முதல்வர் ஆகியுள்ளேன். அந்த அறிவு கூட இல்லை அந்த ஆளுக்கு," என்று கூறினார்.
மேலும், விஜய் விமர்சனம் குறித்து அவர் கூறிய போது, "நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை," என்று தெரிவித்தார்.
நேற்று விஜய், "இங்கு மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, அந்த ஆட்சி கலைக்கப்படும்," என்று பேசியதற்கு பதிலடியாக உதயநிதி ஸ்டாலின் இந்த பதிலை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், விஜய் மற்றும் உதயநிதி அரசியல் போர் ஆரம்பித்து விட்டதாகவே சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.