dark_mode
Image
  • Thursday, 12 December 2024

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டத்திலிருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, கிரிவலப்பாதைக்கு சிற்றுந்துகள் இயக்கப்படும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும் டிசம்பர் 15ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் 12ம் தேதி வியாழக்கிழமை முதல் 15ம் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் கும்பகோணம், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருச்சி கரூர். காரைக்குடி இராமேஸ்வரம் புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 850 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது. 

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக சிற்றுந்துகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் விவரம்:

திண்டிவனம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் - செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கிளாம்பாக்கம் அடையாறு மாதவரம். * செங்கம் ரோடு அத்தியந்தல் மைதா - பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர். * செங்கம் ரோடு-விட்டோடிகள் நிலம்- ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர். * வேலூர் ரோடு அண்ணா ஆர்ச்- போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு. *  அவலூர்பேட்டை ரோடு-செல்வபுரம் சிவகுமார் மைதானம்- சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம்.

 திருகோயிலூர் ரோடு - மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானம்- திருகோயிலூர், பண்ரூட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி. *  மணலூர்பேட்டை ரோடு SR Steel company எதிரில் உள்ள மைதானம்- மணலூர்பேட்டை கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை.

மேலும் பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிட பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

 
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description