dark_mode
Image
  • Thursday, 12 December 2024

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளதாகவும், மாலை 4 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகா தீபத்தை காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 4089 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை, பெங்களூர், புதுவை உள்ளிட்ட இடங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் உறுதி செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description