சிக்கன் பிரியாணிக்குப் பதில் பீப் பிரியாணி; சர்ச்சையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மெனு!

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தை ஒட்டி, விடுதியும் இயங்கி வருகிறது. இந்த விடுதியில், ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கமாக சிக்கன் பிரியாணி வழங்கப்படும்.
இந்த நிலையில், விடுதியில் உணவு குறித்த பட்டியல் ஒட்டப்பட்டது. அந்த பட்டியலில், ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் பிரியாணிக்கு பதிலாக பீப் பிரியாணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவுப்பு தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உடனடியாக இந்த விவகாரம் குறித்து, பல்கலைக்கழகம் நிர்வாகம் விளக்கமளித்தது. பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகையில், “ மாணவர்களின் உணர்வுகளை அவமதிக்கும் எந்த செயலிலும் பல்கலைக்கழகம் ஈடுபடாது. விடுதி உணவு மெனுக்கள் மாணவர்களின் ஒருமித்த கருத்துடன் தயாரிக்கப்படுகின்றன. அனைவரின் விருப்பங்களும் உணர்திறன்களும் கருத்தில் கொள்ளப்படுவதை உறுதி செய்கின்றன. சிக்கன் பிரியாணிக்குப் பதிலாக பீப் பிரியாணி என தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அறிவிப்பில் தெளிவான தட்டச்சுப் பிழை உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description