கொரோனா பாதித்த 11 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் சலுகை.!!
கொரோனா அதிகம் பாதித்த 11 மாவட்டங்களில் பி.எம்.சி எனப்படும் முந்தைய மாத கணக்கீட்டு முறையைப் பின்பற்றி மின்கட்டணம் செலுத்தலாம். அதன்படி ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான காலத்திற்கான மின்கட்டணத்திற்கு கடந்தாண்டு ஜூன் மாத மின்கட்டணத்தை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய பயனர், கணக்கீடு இல்லாதோர் மற்றும் கூடுதல் கட்டணம் எனக் கருதுவோர் 2021 ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சலுகை கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.