dark_mode
Image
  • Thursday, 12 December 2024

மகாதீபம்: டிசம்பர் 12-14 வரை திருவண்ணாமலை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

மகாதீபம்: டிசம்பர் 12-14 வரை திருவண்ணாமலை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
திருவண்ணாமலையில் மகாதீப நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அடுத்து டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையில் உலக புகழ் பெற்ற அருணாச்சலீஸ்வரர் கோயில் அமைந்துள்ள நிலையில், இந்த கோயிலுக்கு தமிழகத்தில் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர்.

 
இந்த நிலையில், இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருவிழா என்பதும், அந்த திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றதும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில், டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுமார் 2600 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இந்த நிலையில், தீபத் திருவிழாவை ஒட்டி கோவிலை சுற்றியுள்ள மதுக்கடைகளை டிசம்பர் 12 முதல் 14 வரை மூன்று நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமண கோபுர வீதி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூன்று நாட்கள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நடவடிக்கை பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் திருவிழாவின் அமைதியான முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது.
மகாதீபம்: டிசம்பர் 12-14 வரை திருவண்ணாமலை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description