தீ விபத்தால் குடிசை வீட்டை இழந்த குடும்பத்திற்கு அதிமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது..!
தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் புதுநகர் தெருவில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி இவரது கூரை வீடு பட்டாசு வெடித்ததில் எதிர்பாராத விதமாக தீப்பொறி பட்டு குடிசை வீடு முற்றிலும் எரிந்து ஒரு லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் சேதமானது தகவல் அறிந்த அம்மா பேரவை மாவட்ட செயலாளரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான துரை.சண்முகபிரபு தீ விபத்து நடைபெற்ற குடிசை வீட்டிற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முகமது இப்ராகிம் பசுபதிகோவில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து நகர செயலாளர் கோவிந்தசாமி அண்ணா தொழிற்சங்கம் தியாகராஜன் பசுபதி கோவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் மலையரசன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்