அணு ஆயுத அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

புதுடில்லி: 'எந்தவித அணு ஆயுத அச்சுறுத்தல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டில்லியில் தே.ஜ., கூட்டணி பார்லி., குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நிறைவேற்றப்பட்ட தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழு கூட்டம் தீர்மானம், அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது ஆப்பரேஷன் சிந்தூர் மற்றும் ஆப்பரேஷன் மகாதேவின் போது நமது ஆயுதப் படைகளின் தைரியத்தையும், துணிச்சலையும் உறுதிப்படுத்துகிறது.
- இந்தியா மீதான எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தக்க பாடம் புகட்டும் வகையில், பொருத்தமான பதிலடி கொடுக்கும்.
* எந்தவித அணு ஆயுத அச்சுறுத்தல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது.
* பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கத்திற்கும், பயங்கரவாதத்தின் மூளையாக இருப்பவர்களுக்கும் இடையில் வேறுபாடு காட்டாமல் தக்க பதிலடி கொடுப்போம்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்